• May 20 2024

அக்கட சூடு! வசூலில் மிரட்டும் லியோ! தெலுங்கு மாஸ் ஹீரோவை மிஞ்சிய தளபதி!

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளிவந்த படம் லியோ. உலகம் முழுவதும் லியோ ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிவிட்டது. அதற்கு காரணம் விஜய்யின் வெறித்தனமான நடிப்பும், லோகேஷின் அற்புதமான படைப்பும் சேர்ந்த கலவைதான். மேலும் இப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்திய படமாக வெளியாகி இருக்கின்றது.


அந்தவகையில் தமிழ், கேரளாவில் லியோ படத்திற்கு போட்டியாக எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் தெலுங்கில் மாஸ் கீரோ பாலகிருஷ்ணா நடித்த பகவந் கேசரி படம் வெளியாகி இருந்தது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிக போட்டிக்கு நடுவில் லியோ படம் ரிலீஸ் ஆகி இருக்கின்றது.


அந்தவகையில் ஆந்திரவில்  பாலகிருஷ்ணா நடித்த படத்திற்கு மட்டுமே அதிக வரவேற்பு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் லியோ படம் அதிக வசூலில் பெரிய . அடிவாங்கும் என்ற  நிலை இருந்தது.


ஆனால் நேற்றைய நிலவரப்படி அப்படியே உல்டாவாக மாறி இருக்கின்றது. லியோ படத்திற்கே அங்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கின்றது. கலெஷனில் 16கோடி கிடைத்திருக்கின்றது. ஆனால் பாலகிருஷ்ணாவின் பகவந் கேசரி படம் மொத்தமாகவே 20கோடி வசூலை தான் பெற்றிருக்கின்றது.

Advertisement

Advertisement