• Jan 15 2025

பட்டதே போதும்.. நல்ல வேலை திருமணம் நடக்கல..! பப்லு பற்றி பேசிய முன்னாள் காதலி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பப்லு என அழைக்கப்படும் பிரித்விராஜ். இவர் நடித்த சித்தி நாடகம் இன்றளவில் மட்டும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது வெள்ளித் திரையிலும் நடித்து வருகின்றார் பிரித்விராஜ். சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 900 கோடிகளை கடந்து வசூலில் சாதனை படைத்ததாக கூறப்பட்டது.

பிரித்விராஜ் ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கு மகன் ஒருவர் காணப்படும் நிலையில் முதலாவது மனைவியை விவாகரத்து பண்ணி 21 வயதான சீத்தல் என்ற பெண்ணுடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வசித்து வந்தார்.

50 வயதை கடந்த பப்லுவுக்கு தன் மகன் வயதில் பெண் தேவையா? என பலராலும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்கள் இருவரும் சந்தோஷமாகவே இருந்து வந்தார்கள். செல்லும் இடங்களிலும் சரி கொடுக்கும் பேட்டிகளிலும் சரி அவர்களது ரொமான்ஸ்க்கு அளவே இல்லாமல் இருந்தது. பேட்டி ஒன்றின் போது சீத்தலுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்து பார்ப்பவரை முகம் சுளிக்க வைத்திருந்தார்.


ஆனாலும் ஒரு சில நாட்களிலேயே இவர்களுக்கு இடையில் நடந்த பிரச்சனையால் இருவரும் பிரிந்தார்கள். பப்புலுவும் தனது சோசியல் மீடியாவில் தனது காதலியான சீத்தலை பிரிந்து விட்டேன் என அறிவித்திருந்தார். இதனால் பலரும் கண்டபடி வசைப்பாட ஆரம்பித்தார்கள். ஆனாலும்  இவர்களுக்கு இடையில் என்ன பிரச்சனை நடந்தது என இதுவரையில் யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலையில், தற்போது முதன்முறையாக ஷீத்தல் பப்லு பற்றிய சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், எங்களுக்குள் என்ன என்றாலும் நடந்திருக்கலாம். ஆனால் அது ஒரு மேட்டர் இல்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் பிரிய வேண்டும் என நினைத்து இருவரும் பிரிந்து விட்டோம். அது மட்டும் அல்லாமல் காதலிக்கும் போது அவருக்கு கொடுத்த அத்தனை பொருட்களையும் பிரித்திவிராஜிடமே மீண்டும் ஒப்படைத்து விட்டாராம் சீத்தல்.

முதன்முதலாக பிரித்திவிராஜ் ப்ரொபோஸ் பண்ணும்போது மோதிரம் கொடுத்தாராம். அதனையும் அங்கே வைத்து விட்டு வந்து விட்டாராம். மேலும் தங்களுக்குள் நல்ல வேலை திருமணம் நடக்கவில்லை. அதுவரைக்கும் சந்தோஷம். ஏனென்றால் அது எங்கள் இரு வீட்டாரையும் பாதிக்கும் அதை நினைத்து இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் உங்களுடைய வாழ்க்கையில் வேறு யாரேனும் வந்துள்ளார்களா என கேட்க, அதற்கு ஒருத்தரை வச்சு பட்டதே போதும் இனி என் வாழ்க்கையில் இன்னொரு நபர் என்பதை கிடையாது என பதிலளித்துள்ளார்.


Advertisement

Advertisement