• Jan 19 2025

எங்க குடும்பத்துக்கு பல்ப் கொடுத்தது இந்த அக்கா தான்! ரொம்பவும் மிரட்டி இருக்கோம்! அருண்விஜய் அளித்த வைரல் பேட்டி

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறையாக நடித்து வரும் குடும்பம் தான் விஜயகுமாரின் குடும்பம். தற்போது விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய் நடிப்பில் வெளியான மிசன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஊடக சந்திப்பில் அருண்விஜய் தனது குடும்பத்தோடு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தங்கள் குடும்பம் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து இருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி அவர் கூறுகையில், 

எங்க குடும்பத்துல ஸ்ரீதேவி தான் ரொம்ப செல்லம். எல்லாருக்கும் அவரை பிடிக்கும். நாங்க அவளை ஸ்ரீபாப்பானு தான் கூப்பிடுவோம். ஸ்ரீ ஈசியா எல்லாரையும் சமாளிச்சிடுவா. 


ஆனா மூத்த மகள் கவிதா ரொம்பவே ஸ்ரிக்ட் என விஜயகுமார் சொல்லியுள்ளார். அவங்க தான் ஹிட்லர். அப்பா, அம்மாவை கூட சமாளிச்சிடலாம். அக்காவை சமாளிக்கிறது கஷ்டம். அவங்க சொன்னா அப்படியே நாங்க பண்ணிடுவோம். 

எங்க அம்மா நான் ஸ்கூல் படிக்க போகும் போதே பெண்களுடன் பேசக்கூடாது. உன் ஜாதகத்தில் இருக்கு என ஒரு பிட்டை போட்டு வைத்தார். அதனால் எனக்கு நிறைய பெண் தோழிகள் இல்லை. புரோபோசலும் பெரிதாக கிடைக்கவில்லை.


ஆனா கல்யாணத்திற்கு நிறைய பெண்களின் போட்டோக்களை காட்டிய போது, செம கடுப்பானது.  அப்போ பாக்காதனு சொல்லி இப்போ பாருனா. நான் எங்க பார்க்கிறது என்றேன் எனவும் கூறினார் அருண்விஜய். 

அதுமட்டுமின்றி, அனிதா அக்கா படிக்கும் போது ஒருத்தர் என்னை வழியில் நின்று டிஸ்டர்ப் செய்வதாக சொல்ல, நாங்களும் அவரை மிரட்டி மாஸ் காட்டினோம். ஆனா இப்போ கடைசியில் அவரையே எங்க அக்கா காதலித்து கல்யாணம் செய்து எங்களுக்கே பல்ப் கொடுத்து விட்டார். ஆனால் இப்போ அது எல்லாம் நினைச்சா சிரிப்பாக இருக்கு. 


அந்த நேரத்தில், எங்க அண்ணன் தான் நிறைய குடும்பத்துக்காக விட்டுக்கொடுத்து இருக்கிறார். நிறைய எங்களுக்காக செய்வார். அடிக்கலாம் மாட்டார் எனவும் ஸ்ரீதேவி கூறி இருந்தார்.

அதேவேளை, வனிதா விஜயகுமார் அடுக்கிவரும் குற்றச்சாட்டுக்களை எல்லாம் கடந்து, இவர்கள் குடும்பமாக கொடுத்து இருக்கும் பேட்டி இதுதான் என்பதால் மிகவும் வைரலாகி வருகிறது. 

இதேவேளை, அக்கா, அண்ணன், தங்கை என இவர்கள் பாண்ட்டிங் பார்க்கவே அழகாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement