மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகின்றது. இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் ஒருவராக மாரி செல்வராஜ் காணப்படுகின்றார். இவர் இயக்கிய நான்கு படங்களும் மிகச் சிறந்த கதை களத்துடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காணப்படுகின்றது. முக்கியமாக இவரது திரை மொழி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கிய நான்காவது படைப்பாக வெளியான திரைப்படம் தான் வாழை. கடந்த 23ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. ஆனாலும் அதற்கு முன்னதாகவே பல செலிபிரிட்டிகளால் கொண்டாடி தீர்க்கப்பட்டது. படம் ரிலீஸ் ஆன பிறகும் ரசிகர்கள் படத்தைப் பார்த்து தமது கண்ணீரையே பாராட்டாக கொடுத்து வந்தார்கள்.
மாரி செல்வராஜின் இந்த படத்தை பார்த்து பலரும் அவரைக் கொண்டாடி வருகின்றார்கள். அதிலும் பாலா, சூரி ஆகியோர் சோகத்தில் உச்சிக்கே சென்று மாரியின் கைகளை பிடித்து அவரைக் கொஞ்சி அணைத்த காட்சிகள் இன்றளவில் மட்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில், திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமீர், கொட்டுக்காளி பிலிம் பெஸ்டிவல் படம். அதை வெகுஜனங்கள் பார்க்கும் தியேட்டர்களில் போட்டிருக்க கூடாது. வாழை படத்தோடு கொட்டுக்காளி படத்தை ரிலீஸ் செய்தது தவறு என சுட்டிக் காட்டியுள்ளார்.
அதாவது சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றது. ஆனாலும் தற்போது கொட்டுக்காளைளி படத்தை விட பல மடங்கு வசூலை வாழை திரைப்படம் பெற்று வருகின்றது. இவ்வாறான நிலையிலே அமீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
Listen News!