• Jan 15 2025

பாக்கியாவுக்கு ஈஸ்வரி போட்ட எமோஷனல் கண்டிஷன்..! கோபிக்கு சரியான செருப்படி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் , ராமமூர்த்திக்கு நான் தான் சடங்கு பண்ண வேண்டும் எனக்கு அந்த உரிமையை விட்டுக் கொடுங்கள் ஒரு பையனாய் காலம் முழுக்க எனக்கு இந்த குற்ற உணர்ச்சியில் சாக முடியாது என்று கோபி கெஞ்சுகின்றார்.

கமலாவும் அங்கிருந்தவர்களிடம் ஈஸ்வரிடம் பேசுமாறு சொல்ல, ஈஸ்வரி உறுதியாக கோபி அவருக்கு எந்த சடங்கும் செய்யக்கூடாது என்று சொல்லுகின்றார். கமலா மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்க நீ இருக்கிறதா இருந்தா இரு..இல்லையென்றால் வெளியே போ என்று திட்டுகின்றார் ஈஸ்வரி.

அதன் பிறகு கோபியை ஒரு மாதிரி சமாதானம் செய்து வெளியே அழைத்து வர, கோபி தன்னால் விட்டுக் கொடுக்க முடியாது என்று மீண்டும் ஈஸ்வரியின் காலில் விழுந்து கெஞ்சுகின்றார் ஆனாலும் அவர் சம்மதிக்கவே இல்லை.


இதன் போது ராதிகா, பையன் சடங்கு பண்ணவில்லை என்றால் இந்த சடங்கை எல்லாம் யார் பண்ணுவது என கேட்க, இந்த சடங்கை எல்லாம் எங்களது மகள் பாக்கியா பண்ணுவா என்று சொல்லுகின்றார். இதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகின்றார்.

இறுதியில் ஈஸ்வரி பாக்கியாவை உனது மாமாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் நீதான் இறுதிச் சடங்கை பண்ண வேண்டும் என்று சொல்லி அவரை அனுப்பி வைக்கின்றார். அவர் வேறு வழியில்லாமல் ராமமூர்த்திக்குரிய கடமைகளை செய்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement