• Mar 15 2025

உலகநாயகனின் மகள்னா சும்மாவா? கூலி படக்குழுவினருடன் பர்த்டே செலிப்ரேஷன்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமலஹாசனுக்கும் அவருடைய முதல் மனைவியான சரிகாவுக்கும் மகளாக பிறந்தவர் தான் ஸ்ருதிஹாசன். இவர் தனது 39 வது பிறந்த நாளை கடந்த ஜனவரி 28ஆம் தேதி கொண்டாடியுள்ளார். இவருடைய பிறந்த நாளுக்கு ஒட்டுமொத்த திரைப் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர்தான் ஸ்ருதிஹாசன். இவர் ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்பு லக் என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனாலும் அவருக்கு பாலிவுட்டில் பெரிய ஹிட் கிடைக்கவில்லை.

தமிழில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதன் பின்பு விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி என பிரபல முன்னணி நடிகர்களும் நடித்து வந்தார்.


தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்து தற்போது பல தடைகளை தாண்டி தொடர்ச்சியாக தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில், தனது 39 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதோடு தொடர்ச்சியாக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement