• May 19 2024

திருமணமாகாமல் தனிமையில் தவிக்கும் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னனி வகிக்கும் நடிகைகளில் மிக பேமசாக காணப்படுபவர் திரிஷா .இவர் பல முன்னனி நடிகர்களுடன் நடித்ததுள்ளது மட்டும் அன்றி பல விருதுகளையும் பெற்றுள்ளார் .

தெலுங்கு , மலையாளம், கன்னடம் , போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் தற்போது கதாநாயகியாக மட்டுமல்லாமல், சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

நடிகை திரிஷா தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்து வருவதற்கு 96 படம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனென்றால், பல தோல்வி படங்களை கொடுத்து வந்த திரிஷாவிற்கு மாபெரும் வெற்றியை, 96 படம் தேடி தந்தது.

அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகின்றார் இவர்.தற்போது கூட பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகின்றார்.

தற்போது 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்து வருகிறார்.லட்சத்தில் ஆரம்பத்தில் சம்பளம் வாங்கி தற்போது கோடியில் சம்பளம் வாங்கி வருகிறார்.

அத்தோடு அம்மா பாட்டியுடன் வசித்து வரும் சென்னை வீட்டின் மதிப்பு சுமார் 6 கோடி மதிப்பாம். மேலும் ரேஞ்ச்ரோவர் எவோக் 63 லட்சம், 41 லட்சம் மதிப்பு உடைய பிஎம்டபிள்யூ மற்றும் 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் போன்ற கார்களையும் திரிஷா வைத்துள்ளார்.

தற்போது திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு 75 கோடியில் இருந்து 80 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது பொன்னியின் செல்வம் படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை கோடியில் உயர்த்துவார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement