பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 79 நாட்களைக் கடந்துள்ளது. பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சியை விட்டு சென்ற பிறகு இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்கமாட்டார்கள் என்றுதான் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு தான் நிகழ்ச்சியானது சூடு பிடிக்க ஆரம்பித்து ஒளிபரப்பாகி வருகின்றது.
மேலும் கடந்த வாரம் அனன்யா மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியேறியிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலுள்ள மூன்று போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர்.
அதன்படி, விசித்ரா, ரவீனா, சரவண விக்ரம் ஆகியோர் நாமினேஷனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இதில் விசித்ராவுக்கு 42 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கிறது. அதனால் அவர் காப்பாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், விசித்ராவுக்கு அடுத்த படியாகவுள்ள ரவீனாவுக்கு 68,909 வாக்குகளும், விக்ரமுக்கு 45,352 வாக்குகளும் தற்போதைய நிலவரப்படி கிடைத்துள்ளன.
இவ்வாறு வெளியான ஓட்டிங்க் அடிப்படையில் இந்த வாரம் விக்ரம் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பிக் பாஸ் வீட்டில் பல குழப்பங்களுக்கு காரணமான ரவீனாவை தான் வெளியேற்ற வேண்டும் என்பது ஆடியன்ஸின் விருப்பம்.
ஆனால் விஜய் டிவி எப்படியும் இவரை வெளியேற்ற மாட்டார்கள் என்பது தெரிந்த கதைதான். அதன்படி இந்த வாரம் டைட்டில் வின்னர் சரவண விக்ரம் தான் வெளியேற இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!