• May 01 2024

தளபதி 68 இல் இரட்டை வேடத்தில் கலக்கும் இளைய தளபதி வில்லனாக களமிறங்கும் அரவிந்சாமி. ஹீரோயின் யார் தெரியுமா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா  இசையமைப்பில்  நம்ம இளைய தளபதி நடிப்பில் வெளியாக இருக்கும்  படம் தான் தளபதி 68


தனது 10வது வயதில்  (1984 இல் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகி அறிமுகமாகி 18ம் வயதில்  தந்தை சந்திரசேகர்  இயக்கிய நாளைய தீர்ப்பு எனும்  படத்தில் 1922இல் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். ஆனாலும் விக்ரமன் 1996இல் இயக்கிய பூவே உனக்காக  திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனிதில் இடம்பிடித்தவர்.


நம்ம இளைய தளபதி அண்மையில் நடித்த பீஸ்ட் படத்தின் தோல்விலையே முடிந்தது , வாரிசு படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தை  பெற்றதனைத் தொடர்ந்து தற்பொழுது  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய் இப்படம் வெற்றிபெறும் என்றே ரசிகர்கள் நம்புகின்றார்கள்.

இந்நிலையில் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார்.

இந்தச் சூழலில் படத்துக்கான பணிகள் ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி அமெரிக்காவுக்கு விஜய்யும், வெங்கட் பிரபுவும் சென்றனர். அங்கு திறிடீயில்  விஜய்யின் முழு உடம்பையும் ஸ்கேன் செய்யும் புகைப்படம் வெளியாகி ட்ரெண்டானது. இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் வயதான விஜய்க்கு சினேகா ஜோடி; இள வயது விஜய்க்கு ப்ரியங்கா மோகன் ஜோடி என்றும் கூறப்படுகிறது. இப் படத்தில் விஜய்க்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  ஒருவன் படத்தில் ஏற்கனவே அரவிந்த் சாமி வில்லனாக கலக்கியிருந்தார். எனவே விஜய்க்கு வில்லானாக நடித்தால் இன்னும் மாஸ்டாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இதற்கிடையே இந்தப் படத்தில் ஜெய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோரும் நடிக்கலாம் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிகமாக சினமா செய்திகளை  அறிந்து கொள்ள

லியோ இசை வெளியிட்டு விழா தேதி அறிவிப்பு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடு. கடுப்பான ரசிகர்கள்

Advertisement

Advertisement

Advertisement