தமிழ் சினிமாவில் 'உன்னாலே உன்னாலே' படத்திளில் சாக்லேட் பாயாக மக்களை கவர்ந்தவர் தான் நடிகர் வினய். ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து வந்த இவர், அடுத்தடுத்த படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பையும் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
இவருடைய நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் இவரது ஒட்டுமொத்த இமேஜையும் மக்கள் மத்தியில் மாற்றியது. அதன் பின்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்திலும் வில்லன் கேரக்டரில் நடித்திருப்பார். தற்போது மலையாள படத்திலும் நடித்து வருகின்றார்.
d_i_a
வினய் நடிப்பில் இறுதியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்ததோடு இதனை உதயநிதி கிருத்திகா இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் வினய் வழங்கிய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் உன்னாலே உன்னாலே படத்தின் போது நடைபெற்ற சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து உள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், உன்னாலே உன்னாலே படத்தின் போது டைரக்டருக்கு ஒரே ஒரு பொய் சொன்னேன். அந்த பொய் மூலம் தான் எனக்கு அந்த படம் கிடைத்தது. அதாவது டான்ஸ் ஆட தெரியுமா என்று கேட்டனர், அதற்கு ஆமாம் என்று பொய் சொல்லி விட்டேன்.
இதன் மூலம் தான் எனக்கு அந்த பட வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் நான் சினிமா இண்டஸ்ட்ரிக்குள் வந்தது கூட ஒரு லக்கு தான் என தெரிவித்துள்ளார்.
மேலும் உன்னாலே உன்னாலே படம் பண்ணும் போது நிறைய சிகரெட் குடிப்பேன். ஆனால் அதற்குப் பிறகு எனக்கு ஒரு ஆக்சிடெண்ட் நடந்தது. அதனுடன் எல்லாத்தையும் சுத்தமாக விட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார்.
Listen News!