• Sep 20 2024

உன் மண்டைல ஏதாச்சும் இருக்கா? தினேஷிடம் எகிறிய கேப்டன் பூர்ணிமா! சூடுபிடித்தது பிக்பாஸ் ஆட்டம்! வெளியான ப்ரோமோ 2

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை  மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறான நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியான  ஐந்து பேரையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் வந்ததும் தமது வன்மத்தை காட்டத் தொடங்கியுள்ளனர் சக போட்டியாளர்கள்.


அதன்படி, இந்த வார கேப்டனான பூர்ணிமா வேண்டுமென்றே பிளான் போட்டு அந்த ஐவரையும் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.இதையடுத்து வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும்  இடையே சண்டை மூழ்கின்றது.  

அதுமட்டுமின்றி துணியை எங்கு காயவைப்பது என தினேஷ்க்கும் பூர்ணிமாவுக்கும் இடையே வாக்குவாதமொன்று இடம்பெறுகின்றது.இதற்கு, 'மண்டைல ஏதாச்சும் இருக்கா?' என்று தினேஷை பார்த்து கேட்கிறார் நம்ம கேப்டன் பூர்ணிமா. மேலும், 'நீங்க பிரச்சன பண்ணனும்னு நெனச்சா நானும் பிரச்சனை பண்ணுவன்' என்று ஸ்மார்ட் பாஸ் வீட்டார்களிடம் திமிராக நடந்து கொள்கிறார் பூர்ணிமா.


ஆகவே, பிக்பாஸ் வீட்டில் நுழைந்த 5 போட்டியாளர்கள் மூலம் ஆட்டம் மேலும் மாறும் என ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்டுகின்றது. 


Advertisement

Advertisement