• Jan 18 2025

தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி நடிகர் கவினின் காதலியா?- இதுவரை வெளிவராத உண்மைத் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்பொழுது சூப்பர் ஹிட்டாகவும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பின் மத்தியிலும் ஒளிரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.இந்த சீரியலில் ராகினியை யார் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதற்காகவே இதனை பார்வையிட்டு வருகின்றனர். எனவே ராகினி காரக்டரில் நடிப்பவர் குறித்தே தற்பொழுது பார்க்க போகின்றோம்.

அதாவது இந்த சீரியலில் ராகினியாக நடித்து வருபவர் பெயர் அர்சிதா. இவர் இதற்கு முதல் விஜய்டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி பி.ஏ நதம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.தனது 3 வயதில் இருந்தே சீரியலில் நடித்து வருகின்றார்.


மேலும் தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்தாலும் இவர் ஒரு மலையாளி ஆவார். ஜனவரி மாதம் 29ம் திகதி 1991ம் ஆண்டு கேரளாவில் பிறந்துள்ளார். இவருடைய சிறுவயதிலேயே அப்பா தவறியதால் நடிப்பு தான் தன்னுடைய கெரியர் என்று தேர்வு செய்து கொண்டார்.

மேலும் பி.ஏ ரூறிஸ்டம் டிகிரி முடிச்ச இவர் ஒருவரைக் காதலித்து வந்தாராம்.இவர் ஸ்ரோங்காக காதலித்தும் அந்த காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாம். இதனால் அந்த முதல் காதலை மறக்க முடியாமல் இருந்த சந்தர்ப்பத்தில் கனாகாணும் காலங்கள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததாம்.

அதன்படி இந்த சீரியலில் சிவா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த கவினை காதலிக்க வேண்டும் என்பது தான் இவரது ரோஃலாம். அதனை ஏற்றுக் கொண்டு நடித்தாராம். அத்தோடு கவினும் இந்த சீரியல் மூலம் தான்சின்னத்திரையில் அறிமுகமாகினார் என்பதும் தெரிந்ததே. மேலும் அர்சிதா இதனை அடுத்து சன்டிவியின் மூலம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பித்தாராம்.


அதன்படி மகராசி கல்யாணப் பரிசு போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கின்றாராம்.இது தவிர கடந்த 2015ம் ஆண்டு வெளியான காதல் தந்த காவியம் போன்ற திரைப்படத்தில் நடித்திருந்தாராம். தொடர்ந்த ஜுவா நடிப்பில் வெளியான கொரில்லா சிக்சர் போன்ற படங்களிலும் நடித்திருக்கின்றாராம்.

இது தவிர நடிகர் ஆதி நடிப்பில் வெளியான மரகத நாணயம் திரைப்படத்தில் அசிஸ்டன்ட் மேனேஜராகவும் கடமையாற்றி இருக்கிறாராம் . இவருக்கு எல்லா நடிகைகளையும் பிடிக்குமாம். அதனால் அவர்கள் செய்யும் நல்ல விடயங்களில் இவரும் ஆர்வம் காட்டி வருவாராம்.எல்லார் கிட்டையும் சகஜமாகப் பேசக் கூடிய இவர் தனது கெரியரில் மட்டும் தற்பொழுது ஆர்வம் காட்டி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement