தமிழ் திரையுலகின் பிரபலமான காமெடி நடிகர் KPY பாலா, தனது தனித்துவமான நடிப்பு மற்றும் சிறந்த காமெடி உணர்வால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்ல, நிகழ்ச்சிகள் மூலமும் பாலா தனது ரசிகர்களுடன் நெருக்கமான தொடர்பை பராமரித்து வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அரசியல் குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
செய்தியாளர் சந்திப்பின் போது, “த.வெ.க கட்சியில் நீங்கள் இணைகிறீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு பாலா சிறப்பாக பதிலளித்திருந்தார்.

அதாவது, "நமக்கு அரசியல் நோக்கம் எதுவுமே இல்ல. நான் அவ்வளவு பெரிய ஆளும் கிடையாது. நான் ரொம்ப சாதாரணமான மனிதன். நான் சினிமாவில சம்பாதிக்கிறத கடைசி வரைக்கும் மக்களுக்கு கொடுக்கணும் அவ்வளவு தான்." எனக் கூறியிருந்தார்.
இந்த பதில், பாலா அரசியலில் இணையும் நோக்கம் இல்லாமல், தனது நடிப்பு மற்றும் காமெடி வாயிலாக மக்களை மகிழ்விக்க விரும்புகிறார் என்பதை உணர்த்துகிறது.
Listen News!