• Aug 03 2026

தாயை இழந்து துயரில் தவிக்கும் நண்பனின் குடும்பம்.! விஜய் எடுத்த முடிவு.? வெளியான அறிக்கை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி அம்மையார் வயது மூப்பு காரணமாக காலமான செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தமிழ் வெற்றிக் கழக தலைவருமான ஜோசேப் விஜய் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அருமை நண்பர் அஜித்குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். இந்த துயர நேரத்தில் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அஜித் குமார், கடந்த சில ஆண்டுகளில் தனது தந்தையையும் இழந்திருந்த நிலையில் தற்போது தாயாரையும் இழந்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில் முதலமைச்சர் விஜயின் இந்த இரங்கல் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அரசியல் வேறுபாடுகளையும், தொழில் போட்டிகளையும் தாண்டி மனிதநேய அடிப்படையில் அவர் தெரிவித்துள்ள இந்த அனுதாபம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதேபோல் திரையுலகை சேர்ந்த பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் அஜித்குமார் குடும்பத்தினருக்கு தங்களது இரங்கல்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement