• Aug 03 2026

துபாயில் இருந்த அஜித்திற்கு பேரிடியாய் வந்த மரண செய்தி.! அதிர்ச்சியில் திரையுலகினர்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார், சமீப காலமாக திரைப்படங்களை விட கார் ரேஸிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகில் நுழைந்து, இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் அஜித்தின் தாயார் மோகினி (84) வயது மூப்பின் காரணமாக காலமானார். அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அஜித்தின் தந்தை சுப்பிரமணி வயது மூப்பால் உயிரிழந்திருந்தார். அந்த துயரத்திலிருந்து மீண்டு வந்திருந்த குடும்பத்துக்கு, தற்போது மீண்டும் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த நேரத்தில் அஜித் துபாயில் இருந்ததாகவும், தாயார் மறைவு செய்தி கிடைத்ததும் அவர் உடனடியாக இந்தியா திரும்பி வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது உயிரிழந்த அஜித் குமாரின் தாயார் மோகினியின் இறுதிச்சடங்குகள் நாளை சென்னை பகுதியில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement