தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நாக சைதன்யா. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனான இவர், தனது நடிப்பு திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு நாக சைதன்யா, நடிகை சமந்தா ரூத் பிரபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவராக கருதப்பட்ட இவர்களின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்தில் முடிந்தது. இந்த பிரிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்பிறகு, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்த நாக சைதன்யா அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதேபோல், நடிகை சமந்தாவும் தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா தற்போது தனது தனிப்பட்ட உரிமைகள் மற்றும் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது சட்டத்தரணிகள் தாக்கல் செய்துள்ள மனுவில், சமூக வலைதளங்கள் மற்றும் இணைய தளங்களில் தன்னை குறித்து பரவி வரும் சில அவதூறு தகவல்கள் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, முன்னாள் மனைவியான சமந்தாவை ஏமாற்றியதாகவும், அவரது சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட காரணமாக இருந்ததாகவும் கூறப்படும் பதிவுகள் மற்றும் தேடல் முடிவுகள் நீக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மேலும், சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் பிரபலங்களை குறிவைத்து போலி வீடியோக்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட காட்சிகள் உருவாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதன் அடிப்படையில், நாக சைதன்யாவின் பெயர், புகைப்படம் மற்றும் அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்தி உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இணையத்தில் பரவும் தவறான தகவல்கள் தனது நற்பெயருக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நாக சைதன்யா நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தற்போது தெலுங்கு சினிமா வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Listen News!