• Jul 13 2026

முத்துவின் ஒரு முடிவு கோடீஸ்வரனாக்குமா.? குடும்பமே அதிரும் திருப்பம்! டுடே எபிசோட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், முத்து காரில் சவாரி  ஏற்றிச் சென்றவர் முத்துவுக்கு அட்வைஸ் பண்ணுகிறார். அதன்படி உழைப்புடன் கூடிய புத்திசாலித்தனம்தான் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்கும் என்று அவருக்கு ஐடியா கொடுக்கிறார்.

அதன்படி முத்து பல யோசனைகள் செய்து, இறுதியில் தனக்கு முதன்முதலாக தொழில் கற்றுத் தந்த முதலாளியை சந்திக்க செல்கிறார். அங்கு சென்று அவரிடம் ஐடியா கேட்கிறார். அவர் தன்னிடம் தற்போது உள்ள கார்களை காட்டுகிறார். ஆனால் அவை மிகவும் பழுதான கண்டிஷனில் இருக்கின்றன.

மேலும், அவை ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பழுதாக நிற்பதாக சொல்ல, அதனை நான் சரி பண்ணி எடுக்கிறேன் என்று சொல்கிறார் முத்து. ஆனாலும் இது உன்னால் முடியுமா என்று கேட்க, நிச்சயமாக முடியும் என்று சொன்னதும் முதலாளி அவரிடம் அந்த கார்களுக்கான சாவியை கொடுத்து அனுப்புகிறார்.


வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிடம் நடந்தவற்றை சொல்ல, மீனா பயப்படுகிறார். இது தேவையில்லாத ரிஸ்க் என சொல்லுகிறார். மேலும் அந்த வண்டிகளை சரி செய்து எப்போது வாடகைக்கு விட்டு, அப்போது பணம் சம்பாதிப்பது என்று கேட்க, எல்லாம் சரியாகும், பாசிட்டிவாக இரு என்று முத்து ஆறுதல் சொல்கிறார்.

இன்னொரு பக்கம் விஜயாவின் வீட்டை ஏலத்தில் விடுவதற்கு சிந்தாமணியும் பைனான்சியரும் திட்டம் போடுகின்றனர். அதன்படி எல்லா பிளானும் சரியாகத்தான் நடக்கிறது, எங்களுடைய ஆட்கள்மட்டும்தான் ஏலத்திற்கு வருவார்கள், புதிதாக யாரும் வர மாட்டார்கள், அந்த வீடு நிச்சயமாக என்னுடைய கைக்குத்தான் வர வேண்டும் என்று சிந்தாமணி கூறுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement