நடிகர் ஆர்.கே சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காடுவெட்டி. இந்த திரைப்படத்தை சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்ரமணியன் உட்பட பல துணை நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
நகர காதல் என்றால் பெற்றோர்கள், காதலிப்பவர்கள் ஆகியோருடன் இந்த பிரச்சனை முடிந்துவிடும். அதையே கிராமத்துக் காதலென்றால் மதம், சாதி, எந்த மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் எதிர்கொள்கிறார்கள் என்பதை இயக்குனர் அழகாக சொல்லியுள்ளார்
இந்த நிலையில், காடுவெட்டி படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்காக நடிகர் ஆர்.கே சுரேஷ் மீதும், படக்குழுவினர் மீதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அதாவது, பள்ளி மாணவிகள் அரிவாள் எடுக்கச் சொல்லும் வகையிலான காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த பாமக தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு காணப்பட்டது. ஆனாலும் இதில் இடம் பெற்ற சில காட்சிகள் கண்டனத்தை பெற்று வருகின்றன.
அதில் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தன்னிடம் வம்பு செய்தவர்களை அரிவாள் கொண்டு பதிலளிப்பது போலவும், அதை ஆர்.கே சுரேஷ் ஆதரிப்பது போலவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இது விமர்சனத்தை பெற்று வருகிறது.
பள்ளி மாணவிகளை தைரியமாக இருக்கச் சொல்வதில் தவறில்லை. ஆனால் அதற்கு அருவா எடுக்க வேண்டும், தாக்குதல் நடத்தினால் தான் கயவர்கள் நெருங்க மாட்டார்கள் என சொல்வதெல்லாம் வளரும் பிள்ளைகள் நெஞ்சில் வன்மத்தை விதைப்பது என சமூக வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!