தமிழ் சினிமாவில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படங்களில் ஒன்று தான் விடுதலை. அதில் நடிகர் சூரி தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்று இருந்தார்.
விசாரணை திரைப்படத்தின் ஊடாக தமிழில் அறிமுகமாகி ஆடுகளம், அசுரன், வட சென்னை போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குநர் வெற்றிமாறன்.
இவர் இயக்கத்தில் இதுவரை காமெடியனாக நடித்து, சீரியஸ் ஹீரோவாக திடீர் மாற்றம் கொடுத்த சூரி மற்றும் யதார்த்த நடிகன் விஜய் சேதுபதி ஆகியோரின் கூட்டணியில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமே விடுதலை ஆகும். அதன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், விடுதலை படம் என்னுடைய கதை. அதை திருடியே வெற்றி மாறன் விடுதலை படத்தை எடுத்தார் என அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ரவி தம்பி.
மேலும் அவர், 1992-ல் நடைபெற்ற உண்மை நிகழ்வை வைத்து ‘வாச்சாத்தி’ என்ற திரைப்படத்தை 2011ம் ஆண்டு எடுத்தேன். அந்தக் கதையை திருடி ‘விடுதலை’ திரைப்படத்தை எடுத்துள்ளனர்.
அப்போதே அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தேன். பெரிய அதிகார வர்க்கம் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ‘வாச்சாத்தி’ திரைப்பட இயக்குநர் ரவி தம்பி தற்போது கூறியுள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Listen News!