• Jan 18 2025

அமலா பால் இவ்வளவு மோசமானவங்களா? சினிமா மேக்கப் ஆர்டிஸ்ட் உடைத்த உண்மை

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக காணப்பட்டவர் தான் நடிகை அமலாபால். இவர் தமிழில் நடித்த மைனா என்ற திரைப்படம் இவருக்கு நல்லதொரு பெயரை பெற்று கொடுத்தது. இதை தொடர்ந்து பிரபல நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை அமலா பாலுடன் பணியாற்றிய சினிமா மேக்கப் கலைஞர் ஒருவர், தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இந்த விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.

அதன்படி அவர் கூறுகையில், ஒரு முறை அமலாபாலுடன் படப்பிடிப்புக்கு சென்றேன். அது ஏப்ரல், மே மாதத்தில் நடந்த படியால் கடும் வெயிலாக இருந்தது. அந்த படப்பிடிப்பிற்காக நாங்க சென்ற இடத்தில் கொஞ்ச நேரம் உட்காரலாம் என்று நினைத்தால் அங்கு ஒரு செடியோ மரமோ இல்லை.

இதனால் கேரவனுக்குள் உட்கார்ந்து கொண்டோம். ஆனால் நான் உட்கார்ந்த உடனே அமலா பால் தனது மேனேஜரை  அழைத்து என்னை கேரவனை விட்டு வெளியேறும்படி சொன்னார். நானும் இன்னும் சிலரும் அங்கு இருந்தோம். இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கே போய் நிற்பது என்று யோசித்தோம். ஆனாலும் நாங்கள் இறங்கும் வரையில் அவர் விடவே இல்லை. இதனால் இறுதியில் நாங்களே கேரவனை விட்டு இறங்கி விட்டோம்.


இதுபோன்ற நிறைய சம்பவங்கள் அவர் மூலம் எனக்கு நடந்துள்ளன. வட இந்தியாவில் தபு போன்ற ஸ்டார் நடிகைகளுடன் கூட சேர்ந்து பணியாற்றினோம்.  எங்களைப் போன்றவர்களுக்காக தபு போன்ற ஸ்டார் எல்லாம் அவரே கேரவன் புக் பண்ணி எங்களை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த தகவலை வட இந்தியாவின் பிரபல சினிமா மேக்கப் கலைஞர் மற்றும் சிகை அலங்கார நிறுவுனரான ஹேமா  கூறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement