• Jul 04 2025

தனுஷின் 50 வது படம், இந்த வாரமே "ராயன்" இசைவெளியீட்டு விழா !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படமான "ராயன்" தனுஷிற்கு நடிகனாக 50வது படமாகவும் இயக்குனராக 2வது படமாகவும் எண்ணிக்கை சேர்க்கிறது.எனவே இப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

Tamil Movie ...

"ராயன்"  திரைப்படத்திற்காக இயக்குனர் தனுஷின்  நடிகர் தேர்வு பெரிதும் பாராட்டதக்க வகையில் அமைந்திருப்பதை காணகூடியதாய் உள்ளது. காளிதாஸ் ஜெயராம், சுந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா என நீளும் ஆளுமைகள் படத்திற்கு பெரும் துணையென்றே சொல்லலாம்.

Dhanush shares poster of brother ...

அடுத்தடுத்து வெளியாகும் "ராயன்" படத்தின் அப்டேட் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரு வரவேற்பை பெற்றுவரும் நிலையில் ரீலிஸ் டேட் அறிவிக்கப்பட்டு கொண்டாட்டத்தில் இருந்த ரசிகர்களுக்கு போனஸாக வெளியாகியிருக்கிறது அடுத்த அப்டேட். அதாவது வருகிற 06 ஆம் திகதி "ராயன்"  படத்தின் இசைவெளியீட்டு விழா நடக்கவிருப்பதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement