• May 19 2024

சிம்புவிற்கு வலை விரிக்கின்றாரா அமலா பால்…குழம்பிப் போயுள்ள ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. 'காதல் அழிவதில்லை' என்ற படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 'கோவில், குத்து, வல்லவன், சரவணன், தொட்டி ஜெயா' என நெஞ்சை விட்டகலாத பல படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் நடிப்பிற்கு மட்டுமல்லாது சமீபகலாமாக கிசுகிசுப்புக்கு சொந்தக்காரனாகவும் மாறியுள்ளார். பல படங்களில் ஓய்வில்லாமல் பிஸியாக நடித்து வரும் இவர் 'மாநாடு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

குறிப்பாக அவரைக் காதலித்து கழட்டிவிட்ட பெண்களெல்லாம் வரிசையாக திருமணம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து சிம்புவிற்கு எப்போது திருமணம் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதோடு அதனை சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தரிடமும் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் டீவியின் மூலம் தற்போது அவருக்கு ஒரு வரன் கிடைத்திருப்பதாகப் பலரும் கிண்டலாகக் கூறி வருகின்றனர். இதற்குக் காரணம் என்னவென்றால் விஜய் டீவியில் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான்.

அதாவது சின்னத்திரையினை பொறுத்தவரையில் ரசிகர்களுக்கு பிடித்தமான வகையில் பிரமாண்டமான முறையில் என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் டீவியை அடிச்சுக்க ஆளே இல்லை.

இதில் ஒளிபரப்பப்படுகின்ற மிகவும் பிரபலமான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் 3-வது சீசன் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்ததாக என்ன ஷோ தொடங்கப்போகிறது என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தநிலையில் பிக்பாஸ் பிரபலமும் நகைச்சுவை மன்னனுமாகிய ராஜு தொகுத்து வழங்கும் ‘ராஜு வீட்ல பார்ட்டி’ என்ற புத்தம் புது என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சி வரும் ஜூலை 24-ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் உடைய ப்ரோமோ ஒன்று சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இந்தப் ப்ரோமோவில் ராஜுவுடன் இணைந்து பிரியங்கா, சுனிதா, மதுரை முத்து போன்ற பல பிரபலங்கள் அந்நிகழ்ச்சியில் உள்ளனர். இதில் இவர்களுடன் சினிமா பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்க உள்ளதாகக் கூறப்படுகின்றது.

அந்த வகையில் வருகின்ற வாரம் நடிகை அமலாபால் தான் சிறப்பு விருந்தினராக வரப்போகிறார். அதில் அவரிடம் சில கேள்விகளும் கேட்கப்படுகின்றது. மேலும் அவரிடம் ‘உங்களுக்கு யார் மீது செலிபிரிட்டி இருக்கிறது’ என கேட்ட கேள்விக்கு சூர்யா என பதில் சொல்கிறார்.

அதன் பிறகு லவ் மீட்டரை கையில் வைத்துப் பார்க்கும்போது அது உயரவே இல்லை. இதற்கு அமலா பால் "சூர்யாவின் மனைவி ஜோதிகா என்னமோ செய்கிறார்கள்" என கலகலப்புடன் பதில் கூறியிருக்கின்றார்.

தொடர்ந்து ராஜு "திருமணமாகாத ஏதாவது ஒரு செலிபிரிட்டியை சொல்லுங்கள்" என்றதும் கொஞ்சம் கூட யோசிக்காமல் சிம்பு பெயரை அமலாபால் சொல்லி இருக்கின்றார். இதனை பார்த்த பலரும் சிம்புவையும், அமலாபாலினையும் ஜோடி சேர்க்க விஜய் டீவி ப்ளான் பண்ணி வருவதாகக் கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது "செலிபிரிட்டிகளுடன் டேட்டிங் செய்திருக்கிறீர்களா" எனக் கேட்டதற்கும் அமலாபால் ஒத்துக் கொண்டுள்ளார். இப்படி அமலா பாலிடம் சுவாரசியமான பல தகவல்களை கேட்க அவரும் அந்த உண்மைகளை இந்த நிகழ்ச்சியில் போட்டு உடைத்துள்ளார்.

இவ்வாறாக கலகலப்பான வகையில் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றிருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு நிச்சயம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதிலும், டி.ஆர்.பி இல் விஜய் டீவி எகிறும் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை எனப் பலரும் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement