• May 18 2024

34 வயதிலும் வெறித்தனமாக ஜெனிலியா செய்து வரும் விஷயம்…வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்கள் எனப் பல மொழிப் படங்களில் நடித்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் நடிகை ஜெனிலியா. இவர் தனது சிறப்பான நடிப்பினாலும், கடின உழைப்பினாலும் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்கின்றார். 2003 இல் இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகிய 'போய்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து விஜய், பரத், ஜெயம்ரவி எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படம் யாராலும் மறக்க முடியாது. இப்படத்தில் ஹாசினி என்ற பாத்திரத்தில் குதூகலம், குறும்புத்தனம் மிக்க பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். இவரது நடிப்பில் வெளியாகிய ஏனைய மொழித் திரைப்படங்களாக 'சத்யம், துஜே மேரி கசம், சம்பா, நா அல்லுடு, சுபாஷ் சந்திர போஸ், ராம், பொம்மரில்லு, தீ போன்ற படங்களை குறிப்பிடலாம்.

'பொம்மரில்லு' படத்தில் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக 2006 இல் சிறந்த நடிகைக்கான விருதை தெலுங்கில் வென்றார். மேலும் 2007 இல் சிறந்த நடிகைக்கான விருதை 'தீ' படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்ட ஜெனிலியா சிறிது காலம் படங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருந்தார். எனினும் இவர் மீண்டும் தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் 'டாலி கி டோலி' என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை என பிஸியாக இருக்கும் நடிகை ஜெனிலியா அவ்வப்போது சமூக வளைத்தளங்களில் தன்னைப் பற்றிய செய்திகளைப் பகிரும் வழக்கம் கொண்டவர். அந்தவகையில் சமீபத்தில் டெய்லி ரூட்டினுடைய முக்கியத்துவத்தை வலுயுறுத்தி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.

இந்த பதிவானது பலராலும் லைக் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி "34 வயதிலும் அழகு குறையாமல் 18 வயது பொண்ணு மாதிரியே இருக்காங்க" எனக் கூறி அவரது ரசிகர்கள் தமது கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement