• May 18 2024

மைனா நந்தினியின் குறும்புத்தனமான நடனம்…அவரே வெளியிட்ட பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டீவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரில் கிராமத்துப் பெண்ணாக தாவணி பாவடையுடன் வலம் வந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவரே மைனா நந்தினி. இவரது சத்தமான சிரிப்பிற்கும், அழகிய நடிப்பிற்கும் மயங்காதவர்களே இல்லை என்று தான் கூறலாம்.

அதுமட்டுமன்றி தற்போது பல சீரியல்கள், திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோக்களில் கலக்கி வருகிறார். அதிலும் குறிப்பாக 'மிஸ்டர் அன் மிஸ்ஸல்' சின்னத்திரையில் தனது கணவர் யோகேஷுடன் கலந்து கொண்டு இவர்கள் இருவரும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தம்பதிகளாக மாறினார்கள்.

எனினும் இவர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்கு முன்னதாக இருந்தே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார். அதில் தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்கள் என அவ்வப்போது வெளியிட்டு அசத்திவருவார்.

அதிலும் ஆச்சரியப்படக் கூடிய விடயம் என்னவென்றால் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 40 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் மைனா நந்தினியினைப் பின்தொடர்கின்றனர். அதுமட்டுமல்லாது ரசிகர்களை மேலும் மேலும் கவரும் விதமாக மைனா 'விங்ஸ்' என்ற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல்வேறு குறும்புத்தனமான தனது வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த சேனலுக்கு இதுவரையில் 772 k சப்ஸ்கிரைப்பர்கள் உள்ளதோடு சில நேரங்களில் அவர்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் பல லட்சம் வியூவர்ஸுடன் டிரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மைனா நந்தினி புது உடை ஒன்றினை அணிந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் நடனம் ஆடும் வீடியோ ஒன்றினைப் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவரை கமெண்டுகளால் கிண்டலடித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement