• May 19 2024

நடிகை நயன்தாரா மீது திடீர் விசாரணை.. மருத்துவத்துறை அமைச்சர் கொடுத்த பேட்டி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில்  இருவரும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் நடந்தது. நேற்று தீடீரென அனைவருக்கும் சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கும் விதமாக தங்களுடைய ட்வின்ஸ் குழந்தைகளின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.

மேலும் இந்த ட்வின்ஸ் குழந்தைகளை நயன்தாரா வாடகைத்தாய் மூலமாக பெற்றுக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் , சட்டத்தின் விதிகளை மீறி நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்கள் என்று சொல்லப்படுகின்றது.

விதிமுறைகளின்படி, திருமணமாகி 5 வருடங்கள் முடிந்திருக்க வேண்டும். அத்தோடு தம்பதியில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியற்றவராக இருக்க வேண்டும். தம்பதிக்கும் வாடகைத்தாய்க்கும் தகுதி சான்றிதல் கட்டாயம். அத்தோடு ஒரு பெண் ஒரு முறை தான் வாடகைத்தாயாக இருக்க முடியும். நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும். வாடகைத்தாய்க்கு 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். என இத்தனை விதிகள் உள்ளனவாம்.

மேலும் இந்த விதி முறைகளை மீறி எப்படி நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இணையத்தில் வைரலாக பேசப்படுகின்றது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் " நயன்தாரா, விக்னேஷ்சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம்...விதி முறைப்படி நடந்ததா என விளக்கம் கேட்கப்படும். விசாரிக்கப்படும் " என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement