• May 18 2024

கலங்கிய ஜிபி முத்து, பிக் பாஸ் வீட்டில் முதல் நாளே இப்படி மாறிட்டாரே!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் பலரது எதிர்பார்ப்புடன்  நேற்று ஆரம்பமாகியுள்ள  நிகழ்ச்சி பிக் பாஸ்.இதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஜிபி முத்து.

இவர் இணையத்தில் மிகவும் பிரபலமான ஒரு நபராக இருந்து வரும் ஜிபி முத்து தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் 6ம் சீசனுக்கு போட்டியாளராக களமிறங்கியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அவரது பயந்த சுபாவத்தை வைத்து கமல்ஹாசனே நேற்று அவரை கலாய்த்து இருந்தார். அத்தோடு ஜிபி முத்து BB வீட்டுக்குள் செல்லும் முன்பு குடும்பத்தினருக்காக கண்ணீர் விட்டார். இதுவரை ஒருநாள் கூட குடும்பத்தை விட்டு பிரிந்தது இல்லை என கூறி இருந்தார் அவர்.

எனினும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜிபி அவரது குடும்பத்தினருக்காக கேமராவில் பேசுகிறார். எனினும் அதன் பின் அவர் கலக்கத்துடன் பெட்டில் படுத்திருக்கும் போது அவரை மற்றவராகள் பயமுறுத்தி அதிர்ச்சியுடன் எழ வைக்கின்றனர்.

அதன் பின் ஜிபி முத்து மழையில் நனைத்து ஜாலியாக என்ஜாய் செய்வதும் காட்டப்பட்டு இருக்கிறது.அத்தோடு  மழையில் அவர் குழந்தையாகவே மாறிவிட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement