• Jul 10 2026

தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கு இடையில் இப்டி ஒரு உறவா.? வெளியான சுவாரஸ்யமான உண்மைகள்...

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லிகளுள் ஒருவராக விளங்கும் இயக்குநர் வெற்றிமாறன், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் தனது அடுத்த படத்தையும், தனுஷ் குறித்து வெளியான தவறான புரிதல்களையும், “வடசென்னை” திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பான விவகாரம் பற்றியும் சிறப்பாகப்  பகிர்ந்திருந்தார்.


இந்நேர்காணலில் அவர் வெளிப்படையாக கூறிய சில வரிகள் ரசிகர்களிடையே மிகவும் உருக்கமாக பதிந்துள்ளது. நேர்காணலில் வெற்றிமாறனிடம், ‘வடசென்னை’ திரைப்படத்தின் காப்புரிமை யாரிடம் இருக்கிறது? தனுஷ் கேட்டாரா? அதை பற்றி உங்கள் பார்வை என்ன?’ என கேட்டபோது, அவர் மிக தெளிவான மனநிலையோடு பதிலளித்தார்.

“தனுஷ் 'வடசென்னை' படத்துக்காக காப்புரிமை கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. உண்மையில் அவர் எந்த பணமும் கேட்கவில்லை. தனுஷுடன் எனக்குள்ள உறவு, ஒரு திரைப்படம் அல்லது ஒரு காப்புரிமை விவகாரத்தின் மூலமாக பாதிக்கப்படக்கூடியது அல்ல.  எங்கள் உறவு பற்றி பேசும் விடயங்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது." என அவர் கூறியிருந்தார்.


இயக்குநர் வெற்றிமாறன், நேர்காணலில் நேர்மையாகப் பேசிய இந்த உரையாடல், ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, சினிமா உலகிற்கே ஒரு உணர்வூட்டும் எடுத்துக்காட்டாகும். தற்பொழுது இந்நேர்காணல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement