• Jan 19 2025

ஃபைட் கிளப்க்கு பதிலாக 'கஞ்சா கிளப்' என்று வைத்திருக்கலாம்.. ஒரே புகை மண்டலம்! ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நிலையில், அதன் முதல் படமாக அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் ஃபைட் கிளப் படத்தை தயாரித்திருக்கிறார். 

குறித்த படத்தில், விஜய்குமார் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப் படமானது நேற்று திரையரங்குகளில் வெளியாகி, ஓடிக்கொண்டுள்ளது.

இப் படத்தில், உறியடி விஜய்குமார் நடித்திருப்பதாலும் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு என்பதாலும் பல்வேறு எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் படத்திற்கு சென்றுள்ளனர். எனினும் அவர்களை அப் படம் திருப்திப்படுத்தவில்லை.


இந்த நிலையில், ஃபைட் கிளப் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அதன்படி, அவர் கூறுகையில், 'படத்தின் ஆரம்பம் எல்லாம் நன்றாக இருந்தது. ஹீரோயின் கேரக்டர் நன்றாக இருந்தது. ஆனால் படம் ஆரம்பித்து 25 நிமிடங்களுக்குள் அந்த கேரக்டரை காணவில்லை. அதற்கு பிறகு படத்தில் எங்கும் வரவில்லை. அதோட அந்த கேரக்டரும் முடிந்துவிட்டது படமும் முடிந்துவிட்டது. படத்துக்கு பெயர் ஃபைட் கிளப். 


எனவே படத்தில் சண்டை போடுவார்கள் என்று பார்த்தால் படம் முழுக்க ஒருத்தரை ஒருத்தர் விரட்டிக்கொண்டே இருக்கிறார்கள். உருப்படியா ஒரு சண்டையும் இல்லை.இந்தப் படத்துக்கு ஃபைட் கிளப் என்று பெயர் வைத்ததற்கு பதிலாக கஞ்சா கிளப் என்று வைத்திருக்கலாம். 

ஏனெனில் படத்தில் கஞ்சா விற்கிறார்கள். கஞ்சா அடிக்கிறார்கள். ஒருவேளை படத்தை எடுத்தவர்கள் கஞ்சா அடித்துவிட்டு எடுத்தார்களா தெரியவில்லை. தியேட்டர் முழுக்க ஒரே புகை மண்டலமாக இருக்கிறது' என்றார். 

Advertisement

Advertisement