• May 11 2024

இனியா கேட்கும் கேள்விகள்-ராதிகா வீட்டிற்கு வரும் பாக்கியா – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பின உச்சத்தில் செல்லும் சீரியல் என்றால் பாக்கியலட்சுமி தொடர் தான்.ஒரு குடும்ப தலைவி படும் கஸ்டத்தையும் எப்படி வாழ்க்ககையை நகர்த்தி செல்லுகின்றார் என்ற மையத்தையும் கொண்டு கதை நகர்ந்து செல்லுகின்றது.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

பாக்கியா ராதிகாவை பார்க்க சென்றிருந்த நிலையில் ராதிகாவின் அம்மா பாக்யா நாடகம் போடுகிறார் கோபி எந்த விதத்திலும் சந்தோஷமாக இருக்க கூடாதென நினைக்கிறார் என ராதிகா மனத்தை மாற்ற முற்படுகின்றார். ஆனால் பாக்கியா உங்களது பிரச்சனை எல்லாம் தீர்ந்து நீங்க பழையபடி சந்தோஷமா இருக்க வேண்டும் நல்ல முடிவா எடுங்க என கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறுகின்றார்.

வீட்டில் எல்லோரும் பிக்னிக் போவது பற்றி பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கோபி வந்து உட்கார இனியா அவரையும் பிக்னிக் அழைக்கிறார். ஆனால் கோபி டாடிக்கு நிறைய வேலை இருக்கு என்னால வர முடியாது இன்னொரு நாள் போகலாமென சொல்ல எல்லோரும் பிளான் பண்ணி விட்டோம் என இனியா கூற அப்படினா நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க என சொல்கிறார்.

கோபி இப்படி சொன்னதால் கோபப்படும் இனிய எப்போதும் நீங்க இப்படித்தான் அவாய்ட் பண்றீங்க, எழில் அண்ணா படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டிட்டு போறேனு சொன்னீங்க அதுவும் செய்யவில்லை என கோபித்துக் கொண்டு உள்ளே சென்று விடுகிறார்.

மேலும் இந்தப்பக்கம் ராதிகா மயூவிடம் கோபியிடம் பேசவேண்டாம் பழகவேண்டாம் என சொல்லிக் கொண்டிருக்க என்னுடைய ஸ்கூல் பிரெண்ட் கிட்ட எல்லார்கிட்டயும் நீங்க அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னேன். இப்போ இரண்டு பேருக்கும் சண்டை என்று சொல்ல எல்லோரும் கேலி பண்ணி சிரிக்கிறாங்க என வருத்தப்படுகிறார். நீங்க கோபி அங்கிள கல்யாணம் பண்ணிக்கங்க என மயூரா சொல்ல ராதிகா அதெல்லாம் நடக்கவே நடக்காது என கூற கோபித்துக் கொண்டு உள்ளே சென்று விடுகிறார்.

இதன் பிறகு இந்த பக்கம் கோபி இனியா தனியாக உட்கார்ந்து கொண்டு இருக்கும்போது வந்து அமர்ந்து அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். உங்களுக்கு என் மேல பாசமே இல்லையென சொல்ல உன் மீத நிறைய பாசம் இருக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் நான் உன்ன பத்தி மட்டும் தான் யோசித்துக் கொண்டே இருப்பேன் என கோபி கூறுகிறார்.

மேலும் அப்படி என்னதான் பிரச்சனை இந்த பிசினஸ்ல பிரச்சனைனா வேற பிசினஸ் பண்ணலாம்ல என இனியா சொல்ல கோபி அமைதியாக இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement