• Jul 15 2025

’இந்தியன் 2’ தயாரிப்பாளர் கோரிக்கைக்கு அனுமதி மறுத்த அரசு? காரணம் ரஜினி, விஜய்யா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

’இந்தியன் 2’ படத்திற்கு டிக்கெட் விலையை உயர்த்த தயாரிப்பு நிறுவனம் லைக்கா தமிழக அரசிடம் அனுமதி கேட்டதாகவும் ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் 750 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் 'இந்தியன் 2’  படத்திற்கு டிக்கெட் விலையை  உயர்த்தி  கொள்ள அந்த மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் தமிழக அரசிடம் தயாரிப்பு தரப்பு டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி கோரியதாகவும் ஆனால் அதற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு, ஐந்து காட்சிகள் திரையிட மட்டும் அனுமதி அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

’இந்தியன் 2’ படத்திற்கு டிக்கெட் விலையை உயர்த்தி கொள்ள அனுமதி அளித்தால் அதன் பின்னர் ’கோட்’ ’கங்குவா’ ’வேட்டையன்’ உட்பட அனைத்து பெரிய படங்களுக்கும் டிக்கெட் விலையை உயர்த்தி கொள்ள அனுமதி அளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இதனால் பொதுமக்கள் அதிருப்திக்கு உள்ளாக நேரிடும் என்பதால் தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement