• Jan 09 2026

சொப்பன சுந்தரியாக மாறிய சோலைவன குயில்.. ரச்சிதா வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரச்சிதா மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவர் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

மேலும் தற்போது சின்னத்திரையில் மட்டுமின்றி பெரிய திரையிலும் ரச்சிதா சில படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்த நிலையில் சற்றுமுன் ரச்சிதா கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ’உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தில் இடம்பெற்ற ’அழகிய லைலா’ என்ற பாடலுக்கு கருப்பு சேலையில் காஸ்ட்யூம் அணிந்து செம போஸ் கொடுத்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக சொப்பன சுந்தரி ஆக மாறிய சோலைவன குயில் என்று ஒருவரும், அந்தப்புரத்து மகாராணி என்று ஒருவரும், கருப்பு சேலையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்றும் கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி இரண்டு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 10,000க்கும் அதிகமான லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement