• Jan 15 2025

கோபி விஷயத்துல ராதிகா சொன்னது தான் கடைசில நடக்குது! அதிர்ச்சியில் பாக்கியா

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்கு எழில் வருகின்றார். அவரைப் பார்த்து வீட்டார்கள் எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். அதன் பின்பு இருவரும் ராமமூர்த்தியிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கின்றார்கள்.

இதைத்தொடர்ந்து கோபி செழியனுக்கு போன் பண்ணி கொண்டு இருக்க, அவர் என்ன விஷயம் என்று கேட்கவும், செழியன் தனக்கு  வேலை இருக்குது என்று சொன்னதோடு தாத்தாவுக்கு பிறந்தநாள் கொண்டாடுகின்றோம் எனவும் சொல்லி விடுகின்றார்.

இதனால் தனக்கு சொல்லவில்லையே என புலம்பிய கோபி ராதிகாவிடம் சொல்லி புலம்பி விட்டு அவரையும் வருமாறு அழைக்கின்றார். அதற்கு ராதிகா நீங்க போய் அசிங்கப்பட்டு தான் வரப் போறீங்க நான் எதற்கு வருனும் என அவர் மறுத்து விடுகின்றார். இதனால் கோபி மட்டும் பிறந்த நாளுக்கு செல்கின்றார்.


அங்கு ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் கோபி வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றார்கள். அந்த நேரத்தில் பாக்கியா அவர்கள் இருவரையும் உடுப்பு மாற்றி விட்டு வர சொல்ல, கோபி ராமமூர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல முனைகின்றார்.

ஆனாலும் ராமமூர்த்தி யாருக்கு யார் அப்பா என பேசுகின்றார். ஈஸ்வரியும் தமக்கு ஒரு மகள்தான் எங்களுடைய சந்தோஷத்திற்காக பிறந்த நாளை கொண்டாடுகின்றார் உனக்கு பிடிக்கவில்லையா என பேசுகின்றார். அங்கு இருப்பவர்கள் பிரச்சனை வேண்டாம் என சமாதானம் செய்யவும் கோபி எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement