• Apr 28 2024

மூணு வாங்கினா ஒரு டிக்கெட் Free..! லியோ படத்திற்கு இப்படியொரு நிலையா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி கடந்த  19ஆம் திகதி கோலாகலமாக வெளியானது.இதை தொடர்ந்து அதற்கான வசூல் வேட்டையும் உச்சத்தை தொட்டது எனலாம்.

லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி மற்றும் பல வலிமையான முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

லியோ படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஏராளமானவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும் லியோ படம் இதுவரையில் திரையிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் லியோ படத்தின் டிக்கெட்டுகள் இலவசம் என போஸ்டர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த தகவல் தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.


அதாவது சூப்பர் மார்க்கெட் ஒன்றில் 3 ஸ்கின் கேர் லோஷன் வாங்கினால் ஒரு லியோ டிக்கெட் இலவசம் என கடைக்கு முன்னால் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த ஆர்வலர்கள்  லியோ படத்துக்கே இந்த நிலையா என ட்ரோல் செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement