• May 18 2024

இது மட்டும் நடக்கவில்லை என்றால் நடிப்பதை நிறுத்தி விடுவேன்- நடிகர் சித்தார்த்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் சித்தார்த். இவரது நடிப்பில் இறுதியாக தமிழில பச்சை மஞ்சள் சிவப்பு, அருவம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருந்தன.

மேலும் சில படங்களில் டப்பிங் ஆட்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். இருப்பினும் சமூக வலைத்தளத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

இவரின் டுவிட்டர் பதிவுகள் அவ்வப்போது சர்ச்சைகளையும் ஏற்படுத்துவதுண்டு. அந்த அளவுக்கு அவர் ட்விட்டரில் ஆக்டிவ். தற்போது Escaype Live என்ற வெப் சீரிஸில் அவர் நடித்து இருக்கிறார். அது ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்து இருக்கும் பேட்டியில் அவர் கூறி இருபதாவது. "நான் டெல்லி பையன் என்பதையே பலரும் மறந்து விடுகிறார்கள். நான் ஹிந்தி நன்றாகவே பேசுவேன். அதனால் இந்த மொழியில் சுவாரஸ்யமாக இருக்கும் ஸ்கிரிப்ட் வந்தால் நடிக்கிறேன்."

"வித்தியாசமாக ரோல்கள் கிடைக்கும் வரை நடிப்பேன். கிடைக்கவில்லை இல்லை என்றால் வேறு வேலை எதாவது பார்ப்பேன்" எனவும் கூறி இருக்கிறார்.

https://www.youtube.com/embed/9JOK7RzxYes
  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement