தமிழ் ரசிகர்களின் மனதில் தனித்த இடம் பிடித்துள்ள நகைச்சுவை நாயகன் KPY பாலா, சமீபத்தில் தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்த ஒரு உணர்வுபூர்வ பேட்டியில், பலரையும் ஆச்சர்யத்திலும், ஆழ்ந்த எண்ணத்திலும் ஆழ்த்தியுள்ளார்.
"நான் நிறைய ஸ்டேஜ்ல பேசிருக்கேன், Perform பண்ணிருக்கேன். ஆனா இப்போ என் மனசுக்கு ஒரு விசேஷமான சந்தோஷம் இருக்கு," என தொடங்கிய அவர், "ஏதோ நாளைக்கே எனக்கு என்ன ஆனாலும் பிரச்சனையில்லை இந்த தருணம் எனக்கு வித்தியாசமா இருக்கு," என உருக்கமாகப் பகிர்ந்தார்.
"எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், ஒரு பையனுக்காக எல்லாமாயிருக்கேன் என்று இவ்வளவு பேர் வந்திருக்காங்க. அது தான் எனக்கு உண்மையான அன்பும் மரியாதையும்," என்றார் அவர், நெஞ்சை நனையவைக்கும் பார்வையுடன்.
"கலக்கப்போவது யாரு?" நிகழ்ச்சியில் தனது பயணத்தைத் தொடங்கிய பாலா, இன்று ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்ல, மனங்களை தொடும் ஒரு மனிதராகவும் மாறியுள்ளார். அவரது இந்த உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள், ரசிகர்கள் மனதில் இன்னொரு பாலாவை அறிமுகப்படுத்தின.
Listen News!