• Jan 15 2025

கோட்-மங்காத்தா மாதிரியில்ல! அடுத்து நடக்கபோறத உங்களால Guess பண்ணவே முடியாது! சேலஞ்ச் பண்ணுறேன்!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் செப்டம்பர் 5 வெளிவர இருக்கும் திரைப்படம் GOAT. தொடர்ந்து இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இந்த படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.


அதில், GOAT படம் எந்த வகையான படம் என்பதை டிரைலரில் கூறியதாகவும் ஆனால் அதை யாரும் சரியாக டிகோட் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இப்படம் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் இருப்பதாகவும், படத்தில் அடுத்து என்ன நடக்கபோகுது என்பதை எளிதில் கண்டு பிடிக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.


மேலும் மங்காத்தா படம் போல் இப்படம் மிக வேகமாக செல்லும் எனவும், மங்காத்தா படத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் முழுக்க முழுக்க ஆண்களுக்கான படம் அதில் நண்பர்கள் எவ்வளவு மோசமாக ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி கொள்கிறார்கள் என்பதை காட்டும் ஒரு படமாக இருந்தது.


ஆனால் GOAT படம் அவ்வாறு இல்லாமல் ஒரு ஆண் மற்றும் அவர் குடும்பத்தை மையமாக வைத்து எடுத்த படமாக இருக்கும். காந்தி என்பவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு பகுதியை காட்டும் ஒரு படம் என கூறினார்.  ரசிகர்களுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். 


Advertisement

Advertisement