• May 20 2024

ரசிகர்களுடன் நிற்கும் நடிகர் அஜித்- திடீரென டுவிட்டரில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது தனது 61வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை எச். வினோத் இயக்குவதோடு போனிகபூர் தயாரித்து வருகின்றார்.

இப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பை விறுவிறுப்பாக இயக்குநர் நடத்தி வருகிறார்

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சுவாரஸ்யமான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதன்படி “இதுவரை 35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், மொத்த படப்பிடிப்பும் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் முடிவடையும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முதல் தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார் . இந்நிலையில் நேற்று இரவு முதல் அஜித் ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் திடீரென வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement