• Sep 24 2024

CWC நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான சிறந்த குக்.. அட இவரா அது..? நம்பவே முடியல.. ரசிகர்களே ஷாக் ஆகிட்டாங்க..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியானது இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. அதில் முதல் சீசனில் வனிதா டைட்டிலை வென்றார். அதேபோன்று இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகாவும் டைட்டிலை வென்றிருந்தனர். 


இந்த மூன்று சீசன்களின் அமோக வெற்றிக்கு பின்னர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஆனது ஆரம்பமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீசனில் குக்குகளாக விசித்ரா, ஷெரின், காளையன், கிஷோர், ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஆண்ட்ரியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய ஷிவாங்கி, இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.


மேலும் இந்நிகழ்ச்சியானது இரு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது எலிமினேட் வாரமும் ஆரம்பமாகி இருக்கின்றது. அந்தவகையில் குக்வித் கோமாளி சீசன் 4 இலிருந்து முதலாவதாக கிஷோர் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.


இதனைத் தொடர்ந்து மற்றோர் தகவலும் வெளியாகி இருக்கின்றது. அதாவது முதல் சுற்றுப் போட்டியில் இந்த வாரத்திற்கான சிறந்த குக் ஆக சிவாங்கி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement