• Sep 22 2023

அப்பவே ஒரு மாதிரி இருக்கு என்றுகேட்டேன், ஆனால் என்னைத் திட்டிட்டாரு- மாரிமுத்துவின் உடல் நிறை குறித்து ஓபனாக சொன்ன நடிகர்

stella / 3 days ago

Advertisement

Listen News!


தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.சினிமாவுக்காக சென்னை வந்த இவர்,இயக்குநர்கள் ராஜ்கிரண், மணிரத்னம்,வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம்உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.பின்னர், 2008-ம் ஆண்டு வெளியான, ‘கண்ணும் கண்ணும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில்பிரசன்னா, உதயதாரா, வடிவேலு நடித்தனர். இதில் வடிவேலுவின் ‘கெணத்த காணோம்’ காமெடி புகழ்பெற்றது.

இதையடுத்து 2014-ம் ஆண்டு மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘சப்பா குரிசு’படத்தைத் தமிழில் ‘புலிவால்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்.பின்னர், ‘யுத்தம் செய்’ படத்தில்இயக்குநர் மிஷ்கின் அவரை குணசித்திர நடிகராக அறிமுகப்படுத்தினார்.இதையடுத்து ஜீவா, கொம்பன், உப்புக்கருவாடு, மருது, சண்டக்கோழி 2 உட்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் வில்லன் விநாயகனுடன் இணைந்து நடித்திருந்தார்.


இவர், சின்னத்திரையில் திருச்செல்வம் இயக்கும் ‘எதிர்நீச்சல்’ என்றதொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதில் அவர் நடிப்புப் பாராட்டப்பட்டது. அவர் மதுரை வழக்கில் பேசும் பேசும் ‘ஏம்மா ஏய்’ என்ற வசனம் எங்கும் பிரபலமானது. இருப்பினும் அண்மையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறப்புக்குள்ளானார்.

இதனால் அடுத்து யார் மாரிமுத்துவாக நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இப்படியான நிலையில் மாரிமுத்துவுடன் எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் அப்பல்லோ ரவி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது, எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 11 நாளுக்கு முன்னாடி நான் மாரிமுத்துவின் வயிற்றைப் பார்த்து அவரிடம் சார் என்ன வயிறு ஜெமினி பிரிட்ஜ் மாதிரி இருக்கு என்று கேட்டேன்.


காரணம் எப்போதும் இருப்பதை விட மாரிமுத்துவின் வயிற்றில் எனக்கு அப்போது மாற்றம் தெரிந்தது. அதற்கு அவர் என்னை பார்த்து எப்படி நீ இப்படி ஒரு கேள்வி கேட்கலாம் என கோபப்பட்டார்.நான் மருத்துவத்துறையில் இருப்பதால் அவரிடம் ஒரு இரண்டு மணி நேரம் தானே என் கூட வந்து செக்கப் பண்ணி பார்க்கலாம் என கேட்டேன், அதற்கு என்னிடம் இனி அப்படி ஒரு கேள்வி கேட்காதே என்னை பார்த்தால் பேஷண்ட் மாதிரி இருக்கா என்று கேட்டார்.

ஆனால் அதன்பிறகு சில நாட்களிலேயே இப்படி நடந்துவிட்டது, அதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது என கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement