• Oct 07 2024

சிவா மனசுல சக்தி 2 எடுக்க போறேன்! எம்.ராஜேஷ் கொடுத்த சூப்பர் அப்டேட் இதோ!

subiththira / 14 hours ago

Advertisement

Listen News!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி படம் இன்று வரை பலருடைய பேவரைட் படமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்திற்கான இரண்டாவது பாகத்தையும் இயக்குநர் எடுக்கத் திட்டமிட்டு வருகிறார்.


சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற பல படங்களை கொடுத்த எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பிரதர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. 


இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், பிரமோஷன் பணிகளில் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், இயக்குனர் எம் ராஜேஷ் பேட்டி ஒன்றில் ஜெயம்ரவி, பிரியங்கா மோகன் குறித்தும் சிவா மனசுல சக்தி படத்தை பற்றியும் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். 


அதில், "சிவா மனசுல சக்தி படத்தின் 2 - வது பாகத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இது குறித்து, நடிகர் ஜீவாவிடமும் பேசியுள்ளதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளார். பிரதர் படத்தின் ரிலீஸ்க்கு பின் இந்த படம் குறித்த அப்டேட் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement