கடந்த சில ஆண்டுகளாக காதல் படங்கள் அதிலும் சின்ன பட்ஜெட் காதல் படங்கள் வெற்றி பெறுவதை அடுத்து புதிய இயக்குனர்கள் நூற்றுக்கணக்கான காதல் கதைகளை தயாரிப்பாளர்களிடம் கொண்டு சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களே தோல்வி அடையும் நிலையில் சின்ன பட்ஜெட்டில் தயாரான காதல் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகின்றன. குறிப்பாக பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான ’லவ் டுடே’ பிக் பாஸ் ரியோ நடித்த ’ஜோ’ மணிகண்டன் நடித்த ’லவ்வர்’ ஆகிய படங்கள் சின்ன பட்ஜெட் மிகப்பெரிய வெற்றி பெற்று தயாரிப்பாளர்களுக்கு பல மடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது.
இதனை அடுத்து தயாரிப்பாளர்கள் சின்ன பட்ஜெட்டில் காதல் படங்களை தயாரிக்க முன்வந்துள்ளதை அடுத்து தற்போது உதவி இயக்குனர்களாக இருக்கும் சிலர் காதல் கதைகளை தயாரிப்பாளர்களுக்கு சொல்லி வருவதாகவும் கிட்டத்தட்ட 100 கதைகள் இதுவரை முன்னணி தயாரிப்பாளர்களுக்கு சொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆரம்ப கட்டத்தில் அஜித், விஜய், சூர்யா ஆகிய முன்னணி நடிகர்கள் காதல் படங்களில் நடித்து வந்தனர் என்பதும், அவை மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் திடீரென தற்போது அவர்கள் ஆக்சன் பாதைக்கு மாறிய பின்னர் காதல் படங்கள் வருவதே குறைந்துவிட்டது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் காதல் படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் தயாரிப்பாளர்கள் காதல் படங்களை அதிகம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தற்போது திரையரங்குகளுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமே வருவதால் அவர்களை நம்பி எடுக்கும் படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது என்றும் அதிரடி ஆக்சன் படங்கள் தோல்வி அடைந்து வருகிறது என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Listen News!