டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) தெரு நாய்கள் பெரும் சர்ச்சைக்கு இடமளித்துள்ளன. சமீபத்தில், தெரு நாய்களை காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு பல பிராணி நேசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, முன்னதாகப் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து, புதிய உத்தரவை வெளியிட்டது. அந்த உத்தரவில், தெரு நாய்களை பிடித்து, கருத்தடை, தடுப்பூசி போட்டு, மீண்டும் அதே பகுதிகளில் விட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு சமூக விழாவில் பேசும் போது நடிகை ரோகிணி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். “இப்பொழுது நாய்களின் உயிருக்காக நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். அது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில் மனித உயிர்களுக்காகவும் கவலைப்படுங்களேன்,” என்றார்.
சமூகத்தில் மனித நேயம் குறைந்து வருவதை கூறிய நடிகை, மனிதர்களுக்கும் ஒரே அளவிலான அக்கறை தேவை என்பதையும் சுட்டிக்காட்டினார். தெரு நாய்கள் விவகாரம் ஒரு தரப்பில் பிராணி பாதுகாப்பு என்றால், மறுபுறம் பொதுமக்களின் பாதுகாப்பும் முக்கியம் என்பதை ரோகிணியின் உரை சுட்டிக்காட்டியது.
Listen News!