தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் வெற்றி விழா, இன்று மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கிய போதும் விழாவிற்கு உள்ளே செல்ல முடியவில்லை என ரசிகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதற்கான முன்னேற்பாடுகள், கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் நிலையில் அதிகப்படியான கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கவும், அசம்பாவிதங்கள் நேராமல் இருக்கவும் பொலிசாரால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்றையத் தினம் நடைபெறும் 'லியோ' சக்ஸஸ் மீட்டில் தளபதி விஜய் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனினும், குறித்த நிகழ்ச்சிக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுகு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கும் கடும் சோதனைகளுக்கு பிற்பாடே டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, லியோ படம் வெளியான போது முதல் காட்சிக்கு அரசு சொன்ன விலையை விட பல மடங்கு அதிகமாக விற்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், விஜய் ரசிகர்களில் சிலர் 'ரூ.10 ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியும் தங்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை' என புகார் கூறியுள்ளனர்.
அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் 'உள்ளே இடமில்லை' என சொல்கிறார்களாம். நின்று பார்க்கிறோம் என்று சொன்னாலும் அனுமதிக்க மறுக்கிறார்கள். இடமில்லை என்றால் எதற்காக இவ்வளவு டிக்கெட்டுகளை விற்க வேண்டும்?' என அதிக விலைக்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
Listen News!