• May 07 2024

காத்துவாக்கில ரெண்டு காதல் திரைப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?- கொண்டாடி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர் தான் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகிய திரைப்படம் தான் காத்துவாக்கில ரெண்டு காதல் திரைப்படம். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயந்தாரா, சமந்தா மூவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

முக்கோண காதல் கதையை மையப்படுத்தி இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், உலகளவில் செய்துள்ள பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். சில ஆண்டுகள் கழித்து விஜய் சேதுபதியின் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருவதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement