• May 01 2024

விருமன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் திகதியை அறிவித்த நடிகர் கார்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர் தான் கார்த்தி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விருமன். இப்படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பான தற்பொழுது முடிவடைந்த நிலையில் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை முத்தையா இயக்கி உள்ளதோடு சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது .

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை வெளியாகும் என கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement