• Jan 18 2025

ஐஸ்வர்யாராய்க்கு காயம் ஏற்பட்டது எப்படி? திடுக்கிடும் தகவல்.. சர்ஜரி வரை சென்றதற்கான காரணம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த சில நாட்களாக கையில் கட்டுடன் காணப்படுகிறார் என்பதும் சமீபத்தில் அவர் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றபோது கூட கையில் கட்டுடன் தான் இருந்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் கையில் காயம் ஏற்பட்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் கடந்த பல ஆண்டுகளாக அவர் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

கடந்த ஆண்டு கூட ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் அவர் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அந்த கேரக்டரை அவரை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்ற அளவுக்கு அவரது நடிப்பு அசத்தலாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தேர்தல் நடந்த போது கையில் கட்டுடன் ஓட்டு போட வந்திருந்த ஐஸ்வர்யா ராய் அதன் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்ற போது கூட கையில் கட்டுடன் தான் சென்று இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவரது கையில் எப்படி காயம் ஏற்பட்டது என்ற தகவல் கசிந்துள்ளது.

மே 11ஆம் தேதி ஐஸ்வர்யா ராய் தனது வீட்டில் இருக்கும் போது எதிர்பாராத விதமாக தடுக்கி விழுந்து விட்டதாகவும் அப்போதுதான் அவரது ஒரு கை எலும்பு உடைந்து விட்டதாகவும் இதனை அடுத்து டாக்டர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், மேற்கொண்டு காயம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம், கேன்ஸ்  திரைப்பட விழாவுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது.

ஆனால் டாக்டர் சொன்னதை மீறி தான் அவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கையில் கட்டுடன் இருக்கும்போது அவர் திரைப்பட விழாவில் கலந்து கொண்டதால் தான் மீண்டும் அவருக்கு கையில் சிக்கல் ஏற்பட்டதாகவும், கையில் வீக்கம் அதிகமாக இருப்பதால் உடனடியாக சர்ஜரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து இன்னும் ஒரிரு நாளில் அவருக்கு சர்ஜரி செய்யப்படும் என்றும் அதனை தொடர்ந்து பிசியோதெரபி செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. முழுமையாக குணம் அடைந்த பின்னர் அவர் அடுத்த படத்தில் நடிப்பது குறித்து யோசிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement