• Jun 02 2026

ஈஸ்வரி பேச்சை கேட்டு ராதிகாவுக்கு பேசிய கோபி.. குட் நியூஸ் சொன்ன எழில்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில், கோபி ஈஸ்வரிக்கு காபி கொடுத்து விட்டு கிச்சனுக்கு போக வெளிக்கிட, நீ போகணுமா? எனக்கு இங்க இருக்கவே பயமா இருக்கு. யாரும் எதுவும் பண்ணிடுவாங்க என்று என சொல்ல, கமலா யாரை சொல்லுறீங்க என குழம்புகிறார். கோபி நான் போய்ட்டு வந்துடுவேன் என சொல்லி கிளம்புகிறார்.

கோபி போனதும் ஈஸ்வரி டீவியை போட்டு குஷியாக இருக்கிறார். அதை பார்த்து கமலா எல்லாம் நடிப்பு சொல்லிக் கொள்கிறார். அதன் பின் கமலா ராதிகாவுக்காக ஆப்பிள் வெட்டி வைக்க அதை எடுத்து ஈஸ்வரி சாப்பிடுகிறார். கமலா அதை பற்றிக் கேட்க, ராதிகாவும் உங்களுக்கு சுகர் சாப்பிட வேண்டாம் என பறிக்க, உடனே கோபிக்கு போனை போட்டு சொல்ல. எதுவும் கேட்காமல்  ராதிகாவுக்கு பேசிவிட்டு போனை வைக்கிறார்.


மறுப்பக்கம் ஜெனி தாத்தாவுக்கு சாப்பாட்டை கொண்டு போக, அங்கு அமிர்தா சாப்பாட்டை கொடுத்துவிட்டு தாத்தாவுடன் கதைத்துக் கொண்டு இருக்க, ஜெனிக்கு முகம் ஒரு மாதிரி மாறுகிறது. 

அதன்பின், பாக்கியாவும் எழிலும் வந்து தனது கதையை ஓகே சொல்லிட்டாங்க என்று சொல்ல. எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். பிறகு ஈஸ்வரிக்கு போன் பண்ணி சொல்ல, அவர் மிகவும் சந்தோசப்படுகிறார். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement