தமிழ் சினிமாவில் வெளியான தேவன், இணைந்த கைகள், ஊமைவிழிகள் படங்களில் நடித்த முன்னாள் MLA நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள் தான் நடிகை கீர்த்தி பாண்டியன்.
இவர், ஒரு சில படங்களில் தான் நடித்து இருந்தாலும், இணையத்தில் போட்டோ சூட் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.
2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கீர்த்தி பாண்டியன், அண்மையில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகத் திகழும் அசோக் செல்வனை, காதலித்து சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டார் கீர்த்தி பாண்டியன்.
இந்த நிலையில், தனது பிறந்த நாளை கொண்டாட தனது கணவருடன் தாய்லாந்து சென்றுள்ளார் கீர்த்தி பாண்டியன்
தற்போது இவர்களுடைய புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களை ஆட்கொண்டுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...,,,
Listen News!