• Apr 28 2024

வெளியானது லெஜண்ட் சரவணனின் அட்டகாசமான நடனத்துடன்.. 'கோனே கோமானே' பாடல்.. வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சரவணன் அருள். சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளரான இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் தனது கடை விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா, ஸ்ரேயா போன்ற முன்னணி கதாநாயகிகளோடு இணைந்து நடித்து வந்தார். 

அதனைத் தொடர்ந்து சினிமாவிலும் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்திருக்கின்றார். அந்தவகையில் 'தி லெஜண்ட்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கின்றார். இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து பிரமாண்டமாக இயக்கியுள்ளனர்.மேலும் இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா நடித்திருக்கின்றார். 


அந்தவகையில் கடந்தாண்டு வெளியான இப்படத்தை அண்மையில் ஓடிடியில் ரிலீஸ் செய்தனர். ஓடிடியில் இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக யூடியூப்பில் வெளியிட்ட வண்ணம் உள்ளனர் படக்குழுவினர்.


இந்நிலையில் தி லெஜண்ட் படத்தில் இடம்பெறும் கோனே கோமானே பாடலின் வீடியோ தற்போது யூடியூப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. ஜாவத் அலி பாடிய இப்பாடலுக்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். 

எனவே லெஜண்ட் சரவணனின் அசத்தலான நடனத்துடன் பிரம்மாண்ட அரங்கில் படமாக்கப்பட்டுள்ள கோனே கோமானே பாடல் வீடியோ ஆனது தற்போது படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement