நடிகர் சிலம்பரசன் தற்போது கமலுடன் இணைந்து தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக்லைப் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் சிம்பு. இந்நிலையில் தற்போது இவர் ஆடிய விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற யுவன் ஷங்கர் ராஜா கான்செர்ட்டில் பல பிரபலங்கள் கலத்து கொண்டு ஆடி பாடி ரசிகர்களுக்கு விருந்தளித்து இருந்தனர். நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு செம வைபை கொடுத்துள்ளார். முடிந்த அந்த நிகழ்ச்சியின் விடீயோக்கள் இணையத்தை ஆகாரமித்துள்ளது. யம்மாடி ஆத்தாடி பாடலுக்கு அவர் ஆடிய விதம் ரசிகர்களுக்கு உற்ச்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், சிம்புவிற்கு என்னதான் 40 வயதானாலும் இன்னும் அதே எனர்ஜியுடனும், அதே வேகத்துடனும் இருக்கின்றார். 20 வருடங்களுக்கு முன்பு சிம்பு எப்படி இருந்தாரோ ? அதைப்போல தான் தற்போதும் சிம்பு இருக்கின்றார். அவரின் எனர்ஜியில் எந்த மாற்றமும் இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ..
Listen News!